உமர் ஷரீஃப் — 228
11:54 ‘‘எங்கள் தெய்வங்களில் சில உமக்கு ஒரு தீமையை செய்துவிட்டன என்றே தவிர நாம் கூறமாட்டோம்” (என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஹூது) கூறினார்: “நீங்கள் (அவனை அன்றி கற்பனையாக) இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக இருங்கள்!
11:55 அவனை அன்றி (நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு நான் விலகியவன் ஆவேன்). ஆகவே, அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். பிறகு, எனக்கு (அதில்) அவகாசம் அளிக்காதீர்கள்.’’
11:56 “நிச்சயமாக, நான் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். உயிரினம் எதுவும் இல்லை, அவன் அதன் நெற்றி முடியை பிடித்தே தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியும் நேர்மையும் மிக்க) நேரான வழியில் இருக்கிறான்.”
11:57 ஆக, நீங்கள் விலகினால் (எனக்கொன்றும் நஷ்டமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். இன்னும், (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றையும் கண்கானிப்பவன் ஆவான்.”
11:58 (அவர்களை தண்டிப்பதற்கான) நம் உத்தரவு வந்தபோது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் புறத்திலிருந்து (அவர்களை அடைந்த) அருளினால் பாதுகாத்தோம். இன்னும், கடுமையான தண்டனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.
11:59 இவர்கள்தான் ஆது சமுதாய மக்கள் ஆவர். இவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்தார்கள். இன்னும், அவனுடைய தூதர்களுக்கு மாறு செய்தார்கள். இன்னும், பெருமை பிடித்த பிடிவாதக்காரர்கள், கீழ்ப்படியாத முரடர்கள் (ஆகிய தீயோர்) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றினார்கள்.
11:60 இவ்வுலகிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடர்ந்தது. இன்னும், மறுமையிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக ஆது சமுதாயம் தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! “ஹூதுடைய சமுதாயமாகிய ஆதுக்கு அழிவுதான்.”
11:61 இன்னும், ‘ஸமூது’ (மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. அவன்தான் உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். இன்னும், அதில் அவன் உங்களை வசிக்க வைத்தான். ஆகவே, நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பிறகு, (பாவத்திலிருந்து) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகச் சமீபமானவன், பதிலளிப்பவன்.”
11:62 அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் எங்களில் உயர்ந்த தலைவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுக்கிறீரா? இன்னும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அது பற்றி நிச்சயமாக நாங்கள் மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்.