>

உமர் ஷரீஃப் — 226

11:38 அவர் கப்பலைச் செய்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மக்களிலிருந்து பிரமுகர்கள் கடந்து சென்றபோதெல்லாம் அவர்கள் அவரை கேலி செய்தனர். (அதற்கு) அவர் கூறினார்: “நீங்கள் (இப்போது) எங்களை கேலி செய்தால், நீங்கள் கேலி செய்வது போன்று (சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களை கேலி செய்வோம்.”

11:39 “ஆக, இழிவுபடுத்தும் தண்டனை எவருக்கு வருமோ அவரையும் இன்னும் எவர் மீது நிலையான தண்டனை இறங்குமோ அவரையும் (விரைவில்) நீங்கள் அறிவீர்கள்.”

11:40 இறுதியாக, நம் கட்டளை வந்தபோது, இன்னும், அடுப்பும் பொங்கியபோது, நாம் கூறினோம்: “எல்லாவற்றிலிருந்தும் (ஆண், பெண் என) இரண்டு ஜோடிகளையும் எவர் மீது (அவரை அழிப்போம் என்ற) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர (மற்ற) உமது குடும்பத்தையும் நம்பிக்கை கொண்டவரையும் அதில் ஏற்றுவீராக!” ஆனால், (வெகு) குறைவானவர்களைத் தவிர (அதிகமானவர்கள்) அவருடன் நம்பிக்கைகொள்ளவில்லை.

11:41 இன்னும், (நூஹ்) கூறினார்: “இதில் பயணியுங்கள். அது ஓடும்போதும், அது நிறுத்தப்படும்போதும் அல்லாஹ்வின் பெயரால் (அது ஓடுகிறது; இன்னும், நிற்கிறது). நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”

11:42 அது, மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. இன்னும், (அவரை விட்டு) விலகி ஓர் இடத்திலிருந்த அவரது மகனை கூவி அழைத்தார்: “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணித்துவிடு! நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே!”

11:43 (அதற்கவன்) கூறினான்: “(வெள்ள) நீரிலிருந்து என்னைக் காக்கும் ஒரு மலையின் மேல் ஒதுங்குவேன்.” அவர் கூறினார்: “இன்று, அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து பாதுகாப்பவர் அறவே இல்லை, அவன் கருணை காட்டியவரைத் தவிர (யாரும் தப்ப முடியாது)!” ஆனால், (அது சமயம்) அவ்விருவருக்கும் இடையில் அலை குறுக்கிட்டது. ஆக, அவன் (அந்த வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகி விட்டான்.

11:44 இன்னும், கூறப்பட்டது: “பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; இன்னும், வானமே! (பொழிவதை) நிறுத்து.” தண்ணீர் வற்றியது. இன்னும், (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அந்த கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது. இன்னும், “அநியாயக்கார மக்களுக்கு அழிவுதான்” என்று கூறப்பட்டது.

11:45 இன்னும், நூஹ் தன் இறைவனை அழைத்தார். ஆக, அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். இன்னும், நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, இன்னும், நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா நீதமான தீர்ப்பாளன்.”