>

உமர் ஷரீஃப் — 221

10:107 இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்.

10:108 (நபியே!) கூறுவீராக! “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. ஆக, எவர் (இதை நம்பிக்கைக் கொண்டு) நேர்வழி நடப்பாரோ அவர் நேர்வழி நடப்பதெல்லாம் அவரது நன்மைக்காகவே. இன்னும், எவர் (அதை நம்பிக்கை கொள்ளாமல்) வழிகேட்டில் செல்வாரோ அவர் வழிகேட்டில் செல்வதெல்லாம் அவருக்கு கேடாகத்தான். இன்னும், நான் உங்கள் மீது பொறுப்பாளனாக (உங்களை கண்காணிப்பவனாக) இல்லை.”

10:109 (நபியே!) இன்னும், உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக (மார்க்கத்திலும் அதன் அழைப்புப் பணியிலும் உறுதியாக) இருப்பீராக! இன்னும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்.

11:1 அலிஃப் லாம் றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானத்துடன் உறுதி செய்யப்பட்டன. பிறகு, அவை (நபியவர்களுக்கு ஒவ்வொரு சட்டமாக) தெளிவுபடுத்தப்பட்(டு விவரிக்கப்பட்)டன.

11:2 “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) எச்சரிப்பாளரும் நற்செய்தியாளரும் ஆவேன்.”

11:3 “இன்னும், நிச்சயமாக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, முற்றிலும் திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால் நீங்கள் உலகத்தில் வாழ்கின்ற) குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும், மேல் மிச்சமான செல்வமுடையவ(ர் தனது செல்வத்தை தர்மம் செய்யும்போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய செல்வத்தை (அதிகப்படுத்தி) கொடுப்பான். இன்னும், நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.”

11:4 “அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. இன்னும், அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன்.”

11:5 (நபியே!) அறிவீராக! “நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகிறார்கள். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.”