>

உமர் ஷரீஃப் — 195

9:48 திட்டவட்டமாக (அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். இன்னும், காரியங்களை உமக்கு (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது. இன்னும், அவர்கள் வெறுப்பவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ்வின் கட்டளை(யாகிய அவனது மார்க்கம்) வென்றது.

9:49 இன்னும், (நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சோதனையில்தான் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது.

9:50 (நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. இன்னும், உமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இன்னும், அவர்களோ மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் (உம்மை விட்டு) திரும்பி செல்கிறார்கள்.

9:51 (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும்.

9:52 (நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ், தன்னிடமிருந்து; அல்லது, எங்கள் கரங்களால் ஒரு தண்டனையின் மூலம் உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்! நிச்சயமாக நாங்கள் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறோம்.

9:53 (நபியே! நயவஞ்சககர்களை நோக்கி) கூறுவீராக: “விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்.”

9:54 நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; இன்னும், அவர்கள் சோம்பேறிகளாக இருந்த நிலையில் தவிர தொழுகைக்கு வர மாட்டார்கள்; இன்னும், அவர்கள் வெறுத்தவர்களாக இருந்த நிலையில் தவிர தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும் காரணம்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.