>

உமர் ஷரீஃப் — 17

2:106 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மாற்றினாலும் அல்லது அதை நாம் மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?

2:107 (நபியே!) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை.

2:108 (இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்.

2:109 வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

2:110 இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

2:111 இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”

2:112 அவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.