உமர் ஷரீஃப் — 15
2:94 (நபியே!) கூறுவீராக: “(யூதர்களே!) அல்லாஹ்விடம் (சொர்க்கம் என்ற) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி (விசேஷமாக) உங்களுக்கு மட்டும் என்று இருந்தால், நீங்கள் (உங்கள் கொள்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்.”
2:95 ஆனால், அவர்களது கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் அறவே விரும்பவே மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
2:96 இன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
2:97 (நபியே!) கூறுவீராக: “(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாக ஆகிவிட்டார்? ஆக, நிச்சயமாக (ஜிப்ரீலாகிய) அவர் அல்லாஹ்வின் அனுமதியுடன் அதை - அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் - உமது உள்ளத்தின் மீது இறக்கினார்.”
2:98 எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகா(யீ)லுக்கும் எதிரிகளாக ஆகிவிட்டார்களோ (அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிட்டார்கள்.) ஆக, நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எதிரி ஆவான்.
2:99 இன்னும், (நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை நாம் உமக்கு இறக்கினோம். ஆனால், அவற்றை நிராகரிக்க மாட்டார்கள், பாவிகளைத் தவிர.
2:100 இன்னும், அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கை செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு கூட்டம் அதை (நிறைவேற்றாது) தூக்கி எறியவில்லையா? மாறாக, அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
2:101 இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை (நம்பிக்கை கொள்ளாமல் அதை) - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்.