>

உமர் ஷரீஃப் — 120

5:71 இன்னும், (அவர்களுக்கு) தண்டனை இருக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, அவர்கள் குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்களை மன்னித்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.

5:72 “நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.

5:73 “நிச்சயமாக அல்லாஹ் - இறைவன் என்பவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். (உண்மையில் வணங்கத் தகுதியான) ஒரே ஒரு இறைவனைத் தவிர இறைவன் (யாரும்) இல்லை. இன்னும், அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் தண்டனை நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.

5:74 (இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.

5:75 மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர (அவர் இறைவனோ, இறைவனின் மகனோ) இல்லை. இவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) நீர் கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகிறார்கள் என்று(ம்) கவனிப்பீராக.

5:76 “உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் சக்தி பெறாதவற்றை அல்லாஹ்வை அன்றி வணங்குகிறீர்களா?’’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.

5:77 (நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் (கெட்ட) பழக்கங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர். இன்னும், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.’’