>

உமர் ஷரீஃப் — 110

5:14 இன்னும், “நிச்சயமாக நாங்கள் கிறித்தவர்கள்’’ எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். ஆக, அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ அதிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். இன்னும், அவர்கள் செய்து வந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு (மறுமையில் தகுந்த கூலி கொடுப்பதன் மூலம்) அறிவிப்பான்.

5:15 வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும், பலவற்றை விட்டுவிடுவார். அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் உங்களிடம் வந்துவிட்டது.

5:16 அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்திற்குரிய பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான்; இன்னும், இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான்; இன்னும், அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.

5:17 நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். ஆக, (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவார்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியதை படைக்கிறான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்.