உமர் ஷரீஃப் — 105
4:171 வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், - அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் மட்டும்தான் (உண்மையில் வணங்கத்தகுதியான) ஒரே ஓர் இறைவன் ஆவான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்.
4:172 ஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமைகளாக இருப்பதை விட்டு அறவே திமிரு (கர்வம்) கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு (கர்வம்) கொள்வார்களோ இன்னும் பெருமையடிப்பாரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்.
4:173 ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும், தன் அருளிலிருந்து (வேண்டியளவு) அவர்களுக்கு அதிகப்படுத்துவான். ஆக, எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனையால் அவன் தண்டிப்பான். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்.
4:174 மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து (தெளிவான) ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. இன்னும், தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு நாம் இறக்கினோம்.
4:175 ஆக, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவ(ன் இறக்கிய குர்ஆ)னைப் பலமாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் அவன் பிரவேசிக்க வைப்பான். இன்னும், தன் பக்கம் (வருவதற்கு) நேரான வழியையும் அவர்களுக்கு அவன் வழிகாட்டுவான்.