>

உமர் ஷரீஃப் — 82

4:24 பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்). (போரில்) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களைத் தவிர. (அந்த அடிமைகளை நீங்கள் திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹ்ர்’ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்களோ ஒழுக்கமுள்ளவர்களாக, சட்டவிரோத உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும். அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹ்ர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமையான மஹ்ருக்குப் பின்னர் நீங்கள் உங்களுக்குள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.

4:25 இன்னும், உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, அவர் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து அவர் மணம் புரியலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. (அடிமைகளும் சுதந்திரமான நீங்களும் மார்க்கம் இன்னும் மனிதத்தில் சமமானவர்களே. அடிமைப் பெண்களை மணம் முடிப்பதில் எந்த தகுதி குறைவும் இல்லை.) ஆகவே, (அடிமைப் பெண்களை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள்; இன்னும், நல்ல முறையில் அவர்களுடைய மஹ்ர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும்; விபச்சாரிகளாக இல்லாமலும் ரகசிய நண்பர்களை எடுத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் (-அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மானக்கேடான செயலை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படுகின்ற தண்டனையில் பாதி அவர்கள் மீது நிறைவேற்றப்படும். இது, (-அடிமைகளை மணமுடிப்பது) உங்களில் பாவத்தை பயந்தவருக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். நீங்கள் (சுதந்திரமான பெண்களை மணமுடிக்கும் வரை) பொறுமையாக இருப்பது உங்களுக்கு நல்லதாகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.

4:26 அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய (நல்ல) வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.