உமர் ஷரீஃப் — 66
3:122 உங்களில் இரு பிரிவினர் கோழைகளாகி (போரை விட்டு) விலகிவிட நாடிய சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ்வோ அவ்விருவரின் பொறுப்பாளன் ஆவான். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்களாக!
3:123 பத்(ர் போ)ரில் நீங்கள் குறைவானவர்களாக இருந்த நிலையில், திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவினான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
3:124 “(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதுமாகாதா?’’ என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
3:125 ஆம், போதுமாகிவிடும். நீங்கள் பொறுமையாக இருந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால்; இன்னும், அவர்கள் இதே வேகத்தில் (-இதே நேரத்தில்) உங்களிடம் (போருக்கு) வந்தால், (தங்களைத் தாமே) அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.
3:126 இன்னும், உங்களுக்கு நற்செய்தியாகவும், அதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைவதற்காகவும் தவிர அல்லாஹ் அதை (-வானவர்களை இறக்கிவைப்பதை) ஏற்படுத்தவில்லை. இன்னும் உதவி வராது, மிகைத்தவனும் ஞானவானுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர.
3:127 நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அல்லாஹ் அழிப்பதற்காக; அல்லது, அல்லாஹ் அவர்களை கேவலப்படுத்திவிட, அவர்கள் (தங்கள்) ஆசை நிறைவேறாதவர்களாக திரும்புவதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்).
3:128 அல்லது, அவர்க(ளில் மீதமுள்ளவர்க)ளை அல்லாஹ் மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவர்களை அல்லாஹ் தண்டிப்பதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்). (ஆகவே, இவை) எதிலும் (நபியே) உமக்கு அதிகாரம் ஏதும் இல்லை. (இவை அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் உள்ளவை ஆகும். அவன் தான் நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)
3:129 இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவை! அவன், தான் நாடியவர்களை மன்னிப்பான்; இன்னும், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
3:130 நம்பிக்கையாளர்களே! (வட்டி வாங்காதீர்கள்! அதிலும் குறிப்பாக) வட்டியை இரட்டிப்பாக்கி பன்மடங்குகளாக (வாங்கி) புசிக்காதீர்கள். (-வட்டிக்கு வட்டி வாங்காதீர்கள்!) இன்னும், நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை (எப்போதும்) அஞ்சுங்கள்.
3:131 இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக) நெருப்பை அஞ்சுங்கள்.
3:132 இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் (மார்க்க சட்டங்கள் எல்லாவற்றிலும்) கீழ்ப்படியுங்கள்.