>

உமர் ஷரீஃப் — 592

87:11 இன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான்.

87:12 (அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான்.

87:13 பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான்.

87:14 (இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

87:15 இன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார்.

87:16 மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

87:17 மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.

87:18 முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,

87:19 இப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது).

88:1 (நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?

88:2 (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.

88:3 (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.)

88:4 (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும்.

88:5 கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும்.

88:6 அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர.

88:7 (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது.

88:8 (நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;

88:9 அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.

88:10 (அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.

88:11 அதில் வீண் பேச்சை அவை செவியுறாது.

88:12 அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்.

88:13 அதில் உயரமான கட்டில்கள் இருக்கும்.

88:14 இன்னும், (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்.

88:15 இன்னும், (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்.

88:16 இன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.

88:17 ஆக, அவர்கள் ஒட்டகத்தின் பக்கம், அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?

88:18 இன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?

88:19 இன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?

88:20 இன்னும், பூமியின் பக்கம், அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?

88:21 ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.

88:22 அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை.