உமர் ஷரீஃப் — 535
56:17 நிரந்தரமான (ஒரே வயதுடைய) சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள்,
56:18 குவளைகளுடன், கூஜாக்களுடன், தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடன்.
56:19 அதனால் (-அந்த மதுவினால்) அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். இன்னும், அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.
56:20 இன்னும், அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,
56:21 அ(ந்த நல்ல)வர்கள் மனம் விரும்புகின்ற பறவைகளின் மாமிசங்களுடனும் (சிறுவர்கள் சுற்றுவார்கள்).
56:22 இன்னும், வெள்ளை நிறமான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்).
56:23 (அந்த அழகிகள்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் (இருப்பார்கள்).
56:24 அவர்கள் செய்துகொண்டிருந்த அமல்களுக்குக் கூலியாக (இந்த சொர்க்க இன்பங்கள் கொடுக்கப்படுவார்கள்).
56:25 அதில் அவர்கள் வீண் பேச்சுகளையோ பாவமான பேச்சுகளையோ செவியுற மாட்டார்கள்.
56:26 (உள்ளங்களை காயப்படுத்தாத) நல்ல பேச்சுகளையும் “ஸலாம்” (என்று ஒருவர் மற்றவருக்கு முகமன்) கூறுவதையும் தவிர (செவியுற மாட்டார்கள்).
56:27 இன்னும், வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!
56:28 அவர்கள் முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகிலும்,
56:29 குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,
56:30 நீங்காத நிழல்களிலும்,
56:31 (நிற்காமல்) ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,
56:32 அதிகமான பழங்களுக்கு அருகிலும்,
56:33 தீர்ந்துவிடாத, தடுக்கப்படாத (பழங்களுக்கு அருகிலும்),
56:34 உயர்வான விரிப்புகளிலும் வலது பக்கம் உடையவர்கள் இருப்பார்கள்.
56:35 இன்னும் அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்,
56:36 ஆக, அவர்களை நாம் ஆக்கி வைத்திருப்போம் (நிரந்தர) கன்னிகளாக,
56:37 கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக,
56:38 வலது பக்கமுடையவர்களுக்காக.
56:39 (வலது பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்,
56:40 இன்னும், பின்னோரிலும் அதிகமானவர்கள் இருப்பார்கள்.
56:41 இன்னும், இடது பக்கமுடையவர்கள்! இடது பக்கமுடையவர்கள் யார்?
56:42 கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,
56:43 இன்னும், கரும் புகையின் நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்.
56:44 (இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.
56:45 இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) ஆடம்பர சுகவாசிகளாக (சரீர இச்சையில் மூழ்கியவர்களாக) இருந்தனர்.
56:46 இன்னும், பெரும் பாவங்களை தொடர்ந்து பிடிவாதம் பிடித்தவர்களாக செய்துகொண்டிருந்தனர்.
56:47 “நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நாங்கள் (இந்த நிலைக்கு மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?”
56:48 “இன்னும், முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படுவார்கள்)?”
56:49 (நபியே!) நீர் கூறுவீராக! “நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்,
56:50 (அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.”