உமர் ஷரீஃப் — 458
38:84 (அல்லாஹ்) கூறினான்: “ஆக, (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.”
38:85 “உன்னாலும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களாலும் (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தை நிரப்புவேன்.”
38:86 (நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும், நான் (பொய்யாக) வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை.”
38:87 (குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.
38:88 இதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.
39:1 மிகைத்தவனும் மகா ஞானவானுமான அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
39:2 நிச்சயமாக நாம் இந்த வேதத்தை உண்மையுடன் உமக்கு இறக்கினோம். ஆகவே, அல்லாஹ்வை வணங்குவீராக, வணக்க வழிபாடுகளை - தீனை அவனுக்கு முற்றிலும் தூய்மைப்படுத்தியவராக.
39:3 அறிந்து கொள்ளுங்கள்! பரிசுத்தமான வணக்க வழிபாடுகள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. அவனை அன்றி (பல) தெய்வங்களை (தங்களுக்கு) எடுத்துக் கொண்டவர்கள், “நாங்கள் அவர்களை வணங்குவதில்லை, அல்லாஹ்வின் பக்கம் அந்தஸ்தால் எங்களை அவர்கள் நெருக்கமாக்குவதற்காகவே தவிர.” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்கின்றவற்றில் தீர்ப்பளிப்பான். பொய்யர்களை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.
39:4 அல்லாஹ் ஒரு குழந்தையை (தனக்கு) எடுத்துக்கொள்ள நாடினால் அவன் தான் படைத்தவற்றில் இருந்து தான் நாடுவதை தேர்ந்தெடுத்திருப்பான். அவன் மகா பரிசுத்தமானவன். அவன்தான் ஒருவனும் அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ் ஆவான்.
39:5 அவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.