உமர் ஷரீஃப் — 372
26:112 அவர் கூறினார்: “அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) செய்துகொண்டு இருப்பது பற்றி எனக்கு ஞானம் இல்லை.
26:113 அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ) இல்லை. நீங்கள் (இதை) உணர வேண்டுமே!
26:114 நான் நம்பிக்கையாளர்களை (என் சபையை விட்டு) விரட்டக் கூடியவன் இல்லை.
26:115 நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.”
26:116 அவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (எங்களை அழைப்பதைவிட்டு) விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது, கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”
26:117 அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்.
26:118 ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! இன்னும், என்னையும் என்னுடன் இருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் பாதுகாத்துக்கொள்!”
26:119 ஆக, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (உயிரிணங்களால்) நிரப்பப்பட்ட கப்பலில் (ஏற்றி) பாதுகாத்தோம்.
26:120 பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்துவிட்டோம்.
26:121 நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
26:122 இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்.
26:123 ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்.
26:124 அவர்களது சகோதரரான ஹூது அவர்களுக்கு (பின் வருமாறு) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா?
26:125 நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய தூதர் ஆவேன்.
26:126 ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:127 இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை.
26:128 உயரமான ஒவ்வோர் இடத்திலும் பிரமாண்டமான கட்டடத்தை வீணாக கட்டுகிறீர்களா?
26:129 இன்னும், பெரிய கோட்டைகளை(யும் நீர் துறைகளையும்) நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள், நீங்கள் நிரந்தரமாக (இந்த உலகத்தில்) இருக்கப்போவதைப் போன்று.
26:130 இன்னும், நீங்கள் யாரையும் தாக்கினால் கருணையின்றி அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள்.
26:131 ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
26:132 இன்னும், நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சுங்கள்!
26:133 கால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்.
26:134 இன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்).
26:135 நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (மறுமை) நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்.
26:136 அவர்கள் கூறினார்கள்: நீர் உபதேசிப்பதும்; அல்லது, உபதேசிக்காமல் இருப்பதும் எங்களுக்கு சமம்தான்.