உமர் ஷரீஃப் — 293
17:105 இன்னும், உண்மையுடன் இ(ந்த வேதத்)தை இறக்கினோம். மேலும், உண்மையுடனேயே இ(ந்த வேதமான)து இறங்கியது. இன்னும், (நபியே!) நற்செய்தி கூறுபவராகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவராகவுமே தவிர நாம் உம்மை அனுப்பவில்லை.
17:106 (நபியே!) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம், மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) நிதானமாக ஓதுவதற்காக. இன்னும், இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.
17:107 (நபியே!) கூறுவீராக! “(மக்களே) நீங்கள் (இதை) நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லது, நம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் (முந்திய வேதங்களின் உண்மையான) கல்வி கொடுக்கப்பட்(டு அதன்படி இதை நம்பிக்கை கொண்)டவர்கள், - அவர்கள் மீது (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிந்தவர்களாக தாடைகள் மீது விழுவார்கள்.
17:108 இன்னும், கூறுவார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறக்கூடியதாகவே இருக்கிறது.”
17:109 இன்னும், அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். மேலும் இ(ந்த வேதமான)து அவர்களுக்கு (அல்லாஹ்விற்கு முன்) உள்ளச்சத்தை அதிகப்படுத்துகிறது.
17:110 (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது, ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் (அவனை) அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” மேலும், (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! இன்னும், அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!
17:111 இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக!
18:1 தன் அடியார் (முஹம்மது நபி) மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், அ(ந்த வேதத்)தில் அவன் ஒரு குறையையும் ஆக்கவில்லை.
18:2 அது (முரன்பாடுகள் அற்ற) நேரானதும் நீதமானதுமாகும். (நிராகரிப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான தண்டனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி(யாகிய சொர்க்கம்) உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்).
18:3 அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
18:4 இன்னும், அல்லாஹ், (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (அதை இறக்கினான்).