>

உமர் ஷரீஃப் — 331

21:102 அவர்கள் அதன் சத்தத்தை செவியுறமாட்டார்கள். அவர்கள் தங்களது ஆன்மாக்கள் விரும்பிய (இன்பத்)தில் நிரந்தரமாக இருப்பார்கள்.

21:103 மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள் (சொர்க்கம் செல்வீர்கள் என்று) வாக்களிக்கப்பட்டு கொண்டிருந்த உங்கள் (மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று கூறி) வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள்.

21:104 நூல்களுக்காக ஏடுகள் மடிக்கப்படுவது போன்று வானத்தை நாம் மடிக்கின்ற நாளில் (மறுமையின் திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது). படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.

21:105 “லவ்ஹுல் மஹ்ஃபூள்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம்: “நிச்சயமாக (சொர்க்க) பூமியானது, - அதை எனது நல்லடியார்கள்தான் சொந்தமாக்குவார்கள்.”

21:106 நிச்சயமாக (அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும்) வணங்குகின்ற மக்களுக்கு போதுமான அறிவுரை இ(ந்த வேதத்)தில் இருக்கிறது.

21:107 (நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.

21:108 (நபியே!) நீர் கூறுவீராக! எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் நிச்சயமாக (வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்களா?

21:109 அவர்கள் விலகிச் சென்றால் (அவர்களை நோக்கி) நீர் கூறிவிடுவீராக: மிகத் தெளிவாக உங்களுக்கு நான் (அறிவிக்க வேண்டிய அனைத்தையும்) அறிவித்து விட்டேன். (இதற்கு மேல்) நீங்கள் எதை வாக்களிக்கப்பட்டீர்களோ அது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்பதை நான் அறியமாட்டேன்.

21:110 நிச்சயமாக அவன் பேச்சில் வெளிப்படையானதையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் (உங்கள் உள்ளங்களில்) எதை மறைக்கிறீர்களோ அதையும் அவன் நன்கறிவான்.

21:111 அ(ல்லாஹ்வின் தண்டனை அல்லது மறுமை தாமதமாகுவ)து உங்களுக்கு சோதனையாகவும் ஒரு (குறிப்பிட்ட) நேரம் வரை (உங்களுக்கு) இன்பமாகவும் இருக்கலாம், நான் (அதை) அறியமாட்டேன்.

21:112 (அல்லாஹ்வின் தூதர்) கூறினார்: என் இறைவா! உண்மையான தீர்ப்பை (எங்களுக்கு) நீ தீர்ப்பாக வழங்குவாயாக! இன்னும், (அவர் மக்களை நோக்கி கூறினார்:) எங்கள் இறைவன் ரஹ்மான் - பேரருளாளன் ஆவான், நீங்கள் (அவனைப் பற்றி தவறாக) வர்ணிப்பதற்கு எதிராக அவனிடம் உதவி தேடப்படுகிறது.