>

உமர் ஷரீஃப் — 75

3:187 அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கினான். அதாவது, அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று. ஆனால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும், அதற்குப் பகரமாகச் சொற்ப கிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டதாகும். (பதவிக்காகவும் செல்வத்திற்காகவும் வேதத்தில் உள்ள சட்டத்தை மாற்றவும் மறைக்கவும் செய்தனர்.)

3:188 (நபியே! செயல்களில்) எவர்கள் அவர்கள் செய்த(தீய)தின் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களோ; இன்னும், அவர்கள் செய்யாத (நல்ல)வற்றைக் கொண்டு அவர்கள் புகழப்படுவதை விரும்புகிறார்களோ அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாப்பில் இருப்பதாக நிச்சயம் நீர் எண்ணாதீர்! துன்புறுத்தும் தண்டனை (கண்டிப்பாக) அவர்களுக்கு உண்டு.

3:189 வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது! இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

3:190 நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் நிறைவான அறிவுடையவர்களுக்கு திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன.

3:191 அவர்கள் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை (துதித்துப் புகழ்ந்து தொழுது) நினைவு கூர்வார்கள். இன்னும், வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் அவர்கள் சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!”

3:192 “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ எவரை நரக நெருப்பில் நுழைக்கிறாயோ அவரை திட்டமாக இழிவுபடுத்தி விட்டாய். உதவியாளர்கள் யாரும் அநியாயக்காரர்களுக்கு இல்லை.”

3:193 “எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்[1] என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”

3:194 “எங்கள் இறைவா! இன்னும், உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! இன்னும், மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மீற மாட்டாய்’’ (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)