>

உமர் ஷரீஃப் — 596

92:10 அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.

92:11 அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது).

92:12 நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்.

92:13 நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!

92:14 ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்.

92:15 அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர.

92:16 அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான்.

92:17 இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.

92:18 அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார்.

92:19 யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது.

92:20 எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார்.

92:21 இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார்.

93:1 (முற்)பகல் மீது சத்தியமாக!

93:2 இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது,

93:3 (நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை.

93:4 இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது.

93:5 திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆக, நீர் திருப்தியடைவீர்.

93:6 உம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்).

93:7 இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.

93:8 இன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான்.

93:9 ஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்!

93:10 ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!

93:11 ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!

94:1 (நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?

94:2 இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்.