உமர் ஷரீஃப் — 528
53:45 இன்னும், நிச்சயமாக அவன்தான் (ஒவ்வொரு படைப்பினத்திலும்) ஜோடிகளை – ஆணையும் பெண்ணையும் – படைத்தான்.
53:46 (கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து (படைத்தான்).
53:47 இன்னும், மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் நிச்சயமாக அவன் மீதே கடமையாக இருக்கிறது.
53:48 இன்னும், நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான். இன்னும், (அவர்களுக்கு அவர்களது செல்வத்தில்) சேமிப்பை ஏற்படுத்தினான். (இன்னும் சிலரை பரம ஏழையாக்கினான்.)
53:49 இன்னும், நிச்சயமாக அவன்தான் ஷிஃரா (Sirius) நட்சத்திரத்தின் அதிபதி ஆவான்.
53:50 இன்னும், நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்.
53:51 இன்னும், ஸமூது சமுதாயத்தை (அழித்தான்.) ஆக, அவன் (அழிக்கப்பட்ட அவர்களில் எவரையும்) மீதம் வைக்கவில்லை. (அவர்களை சந்ததிகள் இன்றி செய்தான்.)
53:52 இன்னும், நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்.) நிச்சயமாக இவர்கள் (எல்லோரும்) மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய எல்லை மீறி(ய குற்றவாளி)களாக இருந்தனர்.
53:53 இன்னும், தலைகீழாக புரட்டப்பட்ட (-நபி லூத் உடைய) சமுதாயத்தை அவன்தான் (தலைகீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்.
53:54 ஆக, எதைக் கொண்டு (அவர்களை) மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)
53:55 ஆக, (மனிதனே!) உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கிறாய்?
53:56 (நபியே!) முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்.
53:57 நெருங்கி வரக்கூடிய (-மறுமையான)து நெருங்கிவிட்டது.
53:58 அல்லாஹ்வை அன்றி அதை (-அதன் திடுக்கங்களை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை.
53:59 ஆக, இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? (-குர்ஆன் ஓதப்படும்போது அதை கேலி செய்கிறீர்களா?)
53:60 (அதன் எச்சரிக்கையால்) நீங்கள் (பயந்து) அழாமல், (திமிரு கொண்டு) சிரிக்கிறீர்களா?
53:61 நீங்களோ (அதை) அலட்சியம் செய்பவர்களாக (-கவனமற்றவர்களாக, புறக்கணித்தவர்களாக, பெருமைபிடித்தவர்களாக, கவிபாடியவர்களாக) இருக்கிறீர்கள்.
53:62 ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள்! இன்னும் (அவனை) வணங்குங்கள்!
54:1 மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது.
54:2 அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கிறார்கள்; இன்னும், (இது) இல்லாமல் போகும் மந்திரமாகும் என்றும் கூறுகிறார்கள்.
54:3 இன்னும், அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் கெட்ட ஆசைகளை பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். பாவம், பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)
54:4 திட்டவட்டமாக எச்சரிக்கை உள்ள செய்திகள் அவர்களிடம் வந்துவிட்டன.
54:5 மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம்) வந்திருக்கிறது. ஆக, எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை.
54:6 ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கியும் அதன் விசாரணையை நோக்கியும்) அழைக்கின்ற நாளில்,