உமர் ஷரீஃப் — 499
45:1 ஹா மீம்.
45:2 மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.
45:3 நிச்சயமாக வானங்கள், இன்னும் பூமியில் பல அத்தாட்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கின்றன.
45:4 இன்னும், (அல்லாஹ்வின் வல்லமையை) உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை அவன் (படைத்து பூமியின் பல பாகங்களில் அவற்றை) பரப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன.
45:5 இன்னும், சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு இரவு, பகல் மாறி மாறி வருவதிலும்; வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் – உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன.
45:6 இவை அல்லாஹ்வின் (வல்லமைகளை விவரிக்கும்) வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். ஆக, அல்லாஹ்(வுடைய செய்திக்குப் பின்னர்) இன்னும், அவனது அத்தாட்சிகளுக்குப் பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?
45:7 அதிகம் பொய் பேசுகின்ற பெரும் பாவிகள் ஒவ்வொருவருக்கும் நாசம்தான்.
45:8 அவன், தனக்கு முன் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதை செவியுறுகிறான். பிறகு, பெருமை பிடித்தவனாக அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் பிடிக்கிறான். ஆக, துன்புறுத்தும் தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!
45:9 இன்னும், நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்தால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள், இழிவுதரும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
45:10 அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்ததும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், பெரிய (கடுமையான) தண்டனை அவர்களுக்கு உண்டு.
45:11 இது நேர்வழியாகும். எவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ - அவர்களுக்கு, அதிகம் வலி தருகின்ற கடுமையான தண்டனை உண்டு.
45:12 அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் உங்களுக்கு கடலை, - அதில் அவனது கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருளாதாரத்தை) தேடுவதற்காகவும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் – வசப்படுத்தினான்.
45:13 இன்னும், வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் - இவை அனைத்தையும் - அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.