>

உமர் ஷரீஃப் — 237

12:15 ஆக, அவர்கள் அவரை அழைத்து சென்றபோது, இன்னும், அவரை கிணற்றின் ஆழத்தில் தள்ளிவிட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தபோது, “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக நீர் அறிவிப்பீர். (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.

12:16 இன்னும், அவர்கள் தம் தந்தையிடம் இரவில் அழுதவர்களாக வந்தனர்.

12:17 அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் (அம்பெறிவதிலும் ஓட்டப்பந்தயத்திலும்) போட்டியிட்டவர்களாக சென்று கொண்டிருந்தோம். இன்னும், எங்கள் பொருளுக்கு அருகில் யூஸுஃபை விட்டு வைத்திருந்தோம். ஆக, (அப்போது) அவரை ஓநாய் (அடித்து) தின்று விட்டது. நாங்கள் (அல்லாஹ்விடம்) உண்மையாளர்களாக இருந்தாலும் நீரோ எங்களை நம்பக்கூடியவராக இல்லை(யே).”

12:18 இன்னும், அவருடைய சட்டையின் மீது ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். (யஅகூப்) கூறினார்: “(அப்படி ஏதும் நடக்கவில்லை.) மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (ஆகவே, அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆக, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் (யூஸுஃபை பற்றி) என்ன விளக்கம் கூறுகிறீர்களோ அதற்கு அல்லாஹ்விடமே உதவி தேடப்படுகிறது.”

12:19 இன்னும், ஒரு பயணக் கூட்டம் (அந்த வழியாக) வந்தது. அவர்கள் தங்களில் தண்ணீர் தேடும் நபரை அனுப்பினார்கள். ஆக, அவர் தனது வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “(எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை) ஒரு வர்த்தகப் பொருளாக (-விற்கப்படும் ஓர் அடிமையாக ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை அவர்கள் (தங்களது மற்ற தோழர்களிடம்) மறைத்தார்கள். அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.

12:20 இன்னும், (யூஸுஃபுடைய சகோதரர்கள் மீண்டும் அந்த கிணற்றருகே வந்தனர்.) எண்ணப்பட்ட (சில சொற்ப) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (அடிமையாக அந்த பயணக் கூட்டத்திடம்) விற்றார்கள். இன்னும், அவர் விஷயத்தில் அவர்கள் ஆசையற்றவர்களாக இருந்தனர்.

12:21 இன்னும், (பயனக்கூட்டம், யூஸுபை எகிப்தியர்களிடம் விற்றுவிட்டார்கள்.) எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தனது மனைவியிடம் கூறினார்: “நீ இவரை கண்ணியமான இடத்தில் தங்கவை! அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது, அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்.” இன்னும், இவ்வாறுதான் பூமியில் யூஸுஃபுக்கு நாம் ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத்திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (எகிப்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காகவும் அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ், தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.

12:22 இன்னும், அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-ஆழமாக புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். இன்னும், நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம்.