உமர் ஷரீஃப் — 236
12:5 (யூஸுஃபின் தந்தை யஅகூப்) கூறினார்: “என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு மிகத் தெளிவான எதிரியாவான்.”
12:6 “இன்னும், இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். இன்னும், (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து (அவன் நாடியதை) உனக்குக் கற்பிப்பான். உன் மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
12:7 யூஸுஃப்; இன்னும், அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு இறை அத்தாட்சிகள் (பல) திட்டவட்டமாக இருக்கின்றன.
12:8 நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்கும் நிலையில், திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (இதில்) நிச்சயமாக நம் தந்தை தெளிவான தவறில்தான் இருக்கிறார்” என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக.
12:9 “யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது, பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும் என்று) தனிப்பட்டதாக ஆகிவிடும். இதன் பின்னர், நீங்கள் (திருந்தி, பாவமன்னிப்பு கோரி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.”
12:10 அவர்களில் கூறுபவர் ஒருவர் கூறினார்: “யூஸுஃபை கொல்லாதீர்கள். இன்னும், நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்.”
12:11 அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! உமக்கு என்ன நேர்ந்தது? யூஸுஃப் விஷயத்தில் நீர் எங்களை நம்புவதில்லை? இன்னும், நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள்தான்.”
12:12 “நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; இன்னும், விளையாடுவார்; இன்னும், நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்.”
12:13 அவர் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கிறது. நீங்கள் (விளையாட்டில் இருக்கும்போது) அவரை கவனிக்காதவர்களாக இருக்கும் நிலையில் ஓநாய் அவரை தின்றுவிடுவதை நிச்சயமாக நான்,பயப்படுகிறேன்.”
12:14 அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையில் அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகளாயிற்றே.”