உமர் ஷரீஃப் — 202
9:94 (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் சாக்கு சொல்வார்கள். (நபியே!) கூறுவீராக: “சாக்கு சொல்லாதீர்கள். நாங்கள் உங்க(ள் சாக்கு)களை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இன்னும், அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும், அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்). பிறகு, மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”
9:95 நீங்கள் (போரிலிருந்து) அவர்களிடம் திரும்பி சென்றால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக, அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகமாகத்தான் இருக்கும்.
9:96 அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைவதற்காக உங்களிடம் சத்தியம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (அம்)மக்களைப் பற்றி திருப்தியடையமாட்டான்.
9:97 கிராம அரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகக் கடுமையானவர்கள். இன்னும், அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாதவர்கள் என்று சொல்வதற்கு மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
9:98 இன்னும், கிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும், உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை (கெடுதிகள் நிகழ்வதை) எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மீதுதான் தண்டனையின் சுழற்சி (-கெடுதி இறங்க) உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
9:99 கிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் புண்ணியங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளை பெறும் வழியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு (நன்மை தரும்) புண்ணியமாக இருக்கும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.