>

உமர் ஷரீஃப் — 191

9:27 பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ், தான் நாடியவர்களை திருந்த செய்து அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.

9:28 நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (உங்களுக்கு தேவையான செல்வத்தை வழங்குவான்) அல்லாஹ் நாடினால். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.

9:29 வேதம் கொடுக்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமல் இருக்கிறார்களோ அவர்களிடம் - அவர்களோ (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில், உடனே வரியை கொடுக்கும் வரை - நீங்கள் போர் புரியுங்கள்.

9:30 ‘உஸைர்’ அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது, அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பா(க இவர்களும் பேசு)கிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுகிறார்கள்?

9:31 இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈஸா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனை அவர்கள் வணங்குவதற்கே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்.