>

உமர் ஷரீஃப் — 158

7:58 நல்ல பூமி, - அதனுடைய தாவரம் அதன் இறைவனின் அனுமதியினால் (அதிகமாக) உற்பத்தியாகிறது. இன்னும் எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) உற்பத்தியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை நாம் விவரிக்கிறோம்.

7:59 திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு (தூதராக) அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”

7:60 அவருடைய சமுதாயத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “(நூஹே!) உம்மை தெளிவான வழிகேட்டில் நிச்சயமாக நாம் காண்கிறோம்.”

7:61 (நூஹ்) கூறினார்: “என் சமுதாயமே! என்னிடம் எவ்வித வழிகேடு(ம் தவறும்) இல்லை; எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”

7:62 “என் இறைவனின் தூது செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். இன்னும், உங்களுக்கு (நன்மையை நாடி) உபதேசிக்கிறேன். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் (வஹ்யின் மூலம்) அறிகிறேன்.”

7:63 “உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து - அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வினால்) கருணை காட்டப்படுவதற்காகவும் - உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?”

7:64 ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும், அவருடன் கப்பலில் இருந்தோரையும் பாதுகாத்தோம். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் குருடர்களான மக்களாக இருந்தனர்.

7:65 இன்னும், ‘ஆது’ (சமுதாய மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆகவே நீங்கள் (அவனை) அஞ்ச வேண்டாமா?”

7:66 அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் காண்கிறோம். இன்னும், நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் (ஒருவராக) எண்ணுகிறோம்.”

7:67 (ஹூது) கூறினார்: “என் சமுதாயமே! மடமை என்னிடம் இல்லை. எனினும், நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”