>

உமர் ஷரீஃப் — 121

5:78 இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூதுடைய நாவினாலும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினாலும் சபிக்கப்பட்டனர். அது, அவர்கள் மாறு செய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலும் ஆகும்.

5:79 அவர்கள் செய்த தீமையிலிருந்து ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை திட்டமாக மிகக் கெட்டதாகும்!

5:80 (நபியே!) அவர்களில் அதிகமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்பு வைப்பதை நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியவை மிகக் கெட்டவையாகும். இன்னும், தண்டனையில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.

5:81 இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (தங்களது பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்.

5:82 (நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு கடுமையான பகைவர்களாக காண்பீர்! இன்னும் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் பாசத்தால் மிக நெருங்கியவர்களாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! அதற்குக் காரணமாவது, நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளும் இருப்பதும், நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொள்ள மாட்டார்கள் என்பதுமாகும்.

5:83 இன்னும், இந்த தூதருக்கு இறக்கப்பட்டதை அ(ந்த கிறித்த)வர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்கள் அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாக இருப்பதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் (-முஸ்லிமான இந்த சமுதாயத்துடன்) எங்களை(யும்) பதிவு செய்!’’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.